சங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்


சங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்



    தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது சங்கரன் கோயில். இக்கோயில் பெயரிலேயே இவ்வூரின் பெயரும் வழங்கி வருவது சிறப்பு. உக்கிரப் பாண்டியனால் ஏறத்தாழப் தொள்ளாயிரத்து நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்னரே இக்கோயில் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோயிலின் வலப் பக்கமுள்ள தூணில் உக்கிர வ்ழுதிப் பாண்டியனது திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    சாலிவாகன சகாப்தம் 945 (கி.பி.1022 ) கொல்லம் 199 இல் மதுரைப் பாண்டிய அரசனான உக்கிர வழுதிப் பாண்டியன் திருநெல்வேலிக்கு வடக்கேயுள்ள மானூருக்கு வந்து, அதனருகே 'உக்கிரங் கோட்டை' அமைத்து அரசாண்டான். அக்கால கட்டத்தில் தான் சங்கரன் கோயிலையும் கட்டியுள்ளார். சகாப்தம் 1095 கொல்லம் 349 இல் சீவலமாற பாண்டிய மன்னன் வள்ளியூருக்கு வந்து திருப்பணி செய்து, பிற்பாடு சங்கரன் கோயிலும் திருப்பணிகள் செய்துள்ளார். அதன் பின் மானூரை விரிவுபடுத்தி, அவ்வூரில் ஒரு குளமும் வெட்டினார். இச்செய்திகளைக் கோயிலில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.13 )மேற்கண்ட பாண்டியரின் ஆட்சிப் பகுதியான மானூர் இன்றும் பள்ளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பேரூர் என்பதையும், சீவலமாற பாண்டியனால் வெட்டப் பட்ட குளத்தில் உள்ள தூணில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு பாண்டியர் வரலாற்றை அறிய உதவும் சான்று என்பதையும், பாண்டியர்களின் படைத்தளமாக விளங்கிய உக்கிரன்கோட்டை பள்ளர்களின் கோட்டை என்பதுவும் வரலாறு.

    உக்கிரவ வழுதிப் பாண்டியன் காலத்தில் கரிவலம்வந்தநல்லூர் நகரை ஆண்ட பிரகத்துவச பாண்டியனும், இக்கோயிலில் திருப்பணிகள் செய்துள்ளார் என்பதும், இப்பாண்டிய மன்னரின் மகனே விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரன் கோயில் இருக்கும் இடம் கரிவலம்வந்தநல்லூருக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் புராணத்தால் புலப்படும் செய்திகளாகும். ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.13 )


மரபு வழிச் செய்திகள்


    "மானூரை ஆண்ட உக்கிர வழுதிப் பாண்டியன் மதுரை மாநகர் சென்று மீனாச்சியம்மையையும் , சொக்கப் பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கம் கொண்டிருந்தார். மணிக்கிரீவன் என்ற தெய்வம் பார்வதி தேவியின் சாபத்தால் பறையனாகிப் புன்னை வனக் காவலனாக இருந்தான். அதனால், அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்த நல்லூர் புன்னை வனத்தில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்க்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு புறத்தில் புற்று ஒன்று வளர்ந்தது. காவற் பறையன் புற்றை வெட்டிய போது புற்றினுள் இருந்த பாம்பின் வாழும் வெட்டப் பட்டது. அப்போது, அவன் அங்கே சிவனின் காட்சியைக் கண்டான். அந்த வேளை உக்கிர பாண்டியன் அடுத்த வனத்தில் இருந்ததை அறிந்து தான் கண்ட காட்சியைச் சொல்ல ஓடினான். அன்று பாண்டியருடைய யானைத் தந்தத்தினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் அது கண்டு செய்வது அறியாது திகைத்து இருந்த போது காவற் பறையன் ஓடி வந்து அரசரிடம் செய்தியைத் தெரிவித்து உடன் வர அழைத்தான். உடன் சென்ற உக்கிர பாண்டியர் புற்றினையும், புற்றிடம் கொண்டாரையும், கூழை வாலினதாக்கிய பாம்பினையும் கண்டார்.







    சங்கரனார் கட்டளையிட உக்கிர பாண்டியர் காடு கொன்று நாடாக்கி, மருத நிலம் சமைத்து, ஊர் அமைத்துக் கோயில் கட்டி ஆட்சி செய்தார். உக்கிர பாண்டியனின் யானை தந்தத்தினால் குத்திய இடத்தில் தோன்றிய ஊருக்கு பெருங்கோட்டூர்  எனப் பெயர் ஏற்பட்டது. உக்கிர பாண்டியன் கோவிற் பூசைக்குப் பெரும் நிலங்களைக் கொடுத்து; ஒரு சித்திரை மாதத்தில் யானை மேல் ஏறி இறைவனைக் காணக் காரணமாக இருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப்  போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டு வந்து பெரு விழா நடத்தி மகிழ்ந்தார்" என்று மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.10 )

    மேற்கண்ட மரபு வழிச் செய்தியில் யானை தந்தத்தால் குத்திய இடத்தில், தோன்றிய பெருங்கோட்டூர் பள்ளர் குலத்தாரின் பேரூராகும். பழம் பெரும் இவ்வூரில் பள்ளர்களின் குடியிருப்பு ஏற்ப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிற்ப்பாடே அங்கே மறவர் குடியேற்றம் ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.





    "இந்திரனுக்குத் துன்பம் இளைத்த மாயாசுரனைத் தொலைக்கக் கோமதியம்மாள் ஏவிய மாயவாயு திக்கில் மலையாக இருந்தது" ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.5 )என்ற செய்தியையும் "தேவேந்திரன் மகனாகிய சயந்தன் காக்கை உருவாகிச் சீதையின் தனத்தில் கொத்தினான். அதையறிந்த இராமபிரான் ஓர் அம்பை அவன் மேல் ஏவினான். சயந்தன் காக்கை உருவம் நீங்கமலேயே நின்றான். இதனால் இந்திரனால் ஏவப்பெற்று, அவன் தந்த முத்து மாலையைச் சங்கரருக்குச் சாத்தி, வழிபாட்டுத் திருவருள் பெற்றதால் முன்னைய உருவம் அடைந்தான்" ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.11 ), என்ற செய்தியையும் சங்கரன் கோவில் தல வரலாறு குறிக்கின்றது. இந்திரனைப் தரம் தாழ்த்தும் பிராமணியத்தின் பிற்போக்குத் தனம் இக்கட்டுக் கதையில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிவ வழிபாட்டிக்கு மாற்றப் படுவதற்கு முன்னர் அங்கே இந்திரா வழிபாடு இருந்தது என்பது தெளிவு.


கல்வெட்டுச் செய்திகள்


    சங்கரன்கோயிலில் பழங்காலப் பாண்டியரலால் கட்டப் பட்ட மண்டபங்களும், அவைகளில் உள்ள சிற்பச் சிலை வேலைப்பாடுகளும் காண்போரைக் கவரும் வண்ணம் உள்ளன. 1506 ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்ட பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகளும் சங்கரன்கோயிலில் காணப்படுகின்றன. இது இவரது 33 வது ஆட்சியாண்டைச் சார்ந்ததாகும். கோயிலைச் சுற்றியுள்ள சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளில் பராக்கிரம பாண்டியன் நிலக்கொடைவழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின் தெற்குச் சுவரில் சிதைந்துள்ள கல்வெட்டு சர்வசித்து சகம் 1510 இல் அவனது 26 ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்டுள்ளது. கி.பி.1562 -1605 வரை அதிவீரராம பாண்டியன் சங்கரன் கோயில் பகுத்யை ஆட்சி செய்துள்ளான். இவனே கழுகுமலைப் பகுதியையும் ஆண்ட பாண்டிய மன்னனாவான். சங்கரன் கோயிலின் வடக்குப் பக்கமுள்ள ஒரு கல்வெட்டில் குலசேகர பாண்டியன் சகம் 1475 ஆகிய தனது மூன்றாவது ஆட்சியாண்டில் கோட்டூர் என்னும் ஊரை இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது.( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.14-15 )


மற்றுமொரு கல்வெட்டில் (கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு)

"
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே
தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன்
தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்தில் பறையர் தங்களுக்கு இந்த
வரிசை உண்டென்று நடப்புவித்தார்கள். ஆனபடியினாலே ஐந்து சாதிக்கும் பிள்ளை என வேந்தலிலிருக்கும் அனுமக் கோடி அடிச்சாலும் (வாகைகுளம்) குட்டிக்குடும்பனும் அல்ல கர்த்தாகுடும்பனும், கூட்டிக் கொண்டு சமூகம் ஏறி விண்ணப்பித்துக் கொள்ள ஆதி பூர்வ ராஜாக்கள் கொடுத்த  பட்டயம் பார்த்துப் பறையர்களுக்கு உண்டான வரிசை நன்மைக்கு மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த
 மாராப்பும், ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் மஞ்சியில் தண்டியக்
 கொம்பில்லாத வீடும் துன்மைக்குக் கட்டணமும், பட்டடப்
படிக்கு கட்டளையிட்டோம். குடும்பிகளுக்கு குதிரைக்குடையும்
 இட்டு இந்த இரண்டு கோட்டை விதைப் பாடும் கொடுத்து இந்த
 வரிசைப் பரிகாரம் கட்டளை இடுவித்தோம். இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்"
 ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 /1914 )
    என்று திருநெல்வேலி -சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நலூரிக் கோயில் கல்வெட்டுகள் குறித்துள்ளன. (தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 / 1914 )

    மேற்கண்ட கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள பாண்டியன் தேவேந்திரனோடே கூடியிருக்க என்ற செய்தியும் தேவேந்திரக் குடும்பன் உக்கிரப் பெரு வழுதியோடும், சோழனோடும், சேரனோடும் உறவுப் படுத்துகின்ற செய்தியும் தேவேந்திரர்களுக்குப் பஞ்சவன் விருது வழங்கப்பட்ட செய்தும் பள்ளர்களே பாண்டிய மரபினர் என்பதை உறுதி செய்கின்றன.

    தமிழகத்தில் நெல்லை முதன் முதலாய்ப் பயிர் செய்தவர்கள் பள்ளர்களே எனக் கூறும் கரிவலம்வந்த நல்லூர்க் கல்வெட்டும் ( ARE 432 /1914 ) திருவில்லிப் புத்தூர்க் கல்வெட்டும் (ARE 588 /1926 ) பள்ளர்களைப் பாண்டியன் உக்கிரப் பெரு வலுதியுடன் தொடர்புபடுத்துகின்றன.

    சங்கரன் கோயில் தேர் மிகப் பெரியதாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாளில் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். தென் பாண்டி நாட்டிலுள்ள பழம் பெரும்கொயிலில் தேரோட்டும் உரிமை காந்திநகர்ப் பள்ளர்களுக்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத் தக்கதாகும். தேர்த் திருவிழாவின் போது தேவேந்திர குல வேளாளர்களின் சமூக கொடியான சிவப்பு,பச்சை வண்ணக் கொடி தேரில் பறக்க விடப்படுவதும் வழக்கில் உள்ளது. (நேர்காணல், வழக்குரைஞர், மா.கலைமணி, அழகநேரி, சங்கரன் கோவில்)

    கரிவலம் வந்த நல்லூர்க் கோயிலில் ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களில் ஆண்டிற்கு இருமுறை தேரோட்டம் நடைபெறும். இக்கோயிலும் தடிபோட்டுத் தேரோட்டும் உரிமை கரிவலம் வந்த நல்லூர் பச்சேரி பள்ளர்களுக்கும், ஒப்பனையாள்புரம் பள்ளர்களுக்கும் உடையதாகும். கோயில் முன்புறம் 'தேவேந்திர குல வேளாளர்' சமூக மடம் உள்ளது. தற்போது வங்கி இக்கட்டிடத்தில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் பத்தாம் திருவிழா பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு உரியதாகும்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும். பெரும்பள்சேரி, வடக்குக் கரிசல்குளம், ஆகிய இரு ஊர்ப் பள்ளர்கள் இக்கோயிலில் தடிபோட்டுத் தேரோட்டும் உரிமை உடையவர்களாக உள்ளனர்.நாணல் புல், மூங்கில் ஆகியவற்றை கோயிலுக்கு வழங்கும் முறையும் பள்ளர்கள் வழி வழியாகப் பின்பற்றி வந்தனர். இதற்காக கோயில் நிருவாகத்தில் இருந்து பள்ளர்களை வெற்றிலை,பாக்கு வைத்து அழைத்தனர். இம்மரபு வழக்கமானது இன்று வரை நீடித்து வருகிறதென்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பள்ளர்கள் இறந்தால் திருவில்லிப்புத்தூர் கோயிலில் பூசை நிறுத்தப் படும். இறந்தவர்களுக்கு கோயிலில் இருந்து வேட்டி,துண்டு,நெருப்பு ஆகியவை கொடுத்து அனுப்புவது இன்றும் நடைமுறையில் உள்ளது. தற்போது கோயில் நிலமான 12 குறுக்கம் வயல்களை பள்ளர்கள் தமக்குச் சொந்தமாக பயிர் செய்து வருகின்றனர். திருவில்லிப்புத்தூரைச் சுற்றிலும் பள்ளர் ஊர்களே ஏராளம் உள்ளன. இக்கோயில் கோபுரமே தமிழ்நாடு அரசு முத்திரையாக உள்ளது.


சங்கரநாராயண சுவாமி கோயிற் புராணம்


    இப்புராணத்தை இயற்றியவர் சீவல மாற பாண்டியராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சங்கரன்கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வம் சங்கரலிங்கப் பெருமாளும், ஆவுடையம்மாளும் ஆவர். இந்நூலில் கடவுள் வணக்கப் பாடலில் 'மல்லர்' என்றும், திருநாட்டுச் சருக்கத்தில் எட்டுப் பாடல்களில் மள்ளர்,மள்ளியர் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளது. அது பற்றி இங்கே பார்ப்போம்.



பாயிரம் - கடவுள் வணக்கம்
செய்யுள் 4 
கருணைக் கடல் மல்லர் சிவபெருமான் 
        "நீர்கொண்ட செலுஞ்சடை மேனிலவுமிழ்வெண் பிறை வயங்க நெடுவான் பூத்த,
        வேர்கொண்ட தாரகையினிடை இடையே தவலமுகை யீன்று தோன்றுங்,
        கார்கொண்ட புன்னை வனங்காமுற்று வாழ்கருணைக் கடலை மல்லற்,
        சீர்கொண்ட சீராசைத் திருநகர் வாழ் சிவக் கொழுந்தைச் சிந்த செய்வோம்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.199 .)

    கங்கையைத் தலை முடியிலே கொண்டவரும், குளிர்ந்த ஒளிக்கதிர்களை வீசும் வெண்பிறை விண்ணிலே பூத்தது போல் தன தலையில் விளங்க வைத்திருப்பவரும் கருணைக் கடலாம் மல்லர் சிவபெருமான் வாழும், அகண்ட வெளியிலே அரும்பு பூத்தது போல் நட்சத்திரங்கள் தோன்றும், மேகங்கள் மழைபொழியும், புன்னை மரங்களும், பூத்து மலரும் பூக்களும் நிறைந்த காடு கொண்ட, சீர் கொண்ட, திருநகர் சங்கரன்கொயிலை மனதில் நினைத்துக் கொள்வோம்" என்ற பொருளில் மேற்கண்ட செய்யுள் பொருள் தருகின்றது.


திருநாட்டுச் சருக்கம்
செய்யுள் 5 
மள்ளர்கள் வெள்ளத்தை அடக்குதல்
        "மதத்த யானையைப் பாகர்கள் வசப்படுத் துதல்போற் 
         கதத்தின் மேவிய வெள்ளத்தைக் கால் குளங் களினால்
         விதத்தி லேலேச் செலுத்திவன் சிறைபுரிந் திரும்பின்
         பதித்த மள்ளர்க ளுழுதொழின் முயற்சியிற் பயின்றார்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.200 .)

    மதம் பிடித்த யானையைப் பாகர்கள் கட்டுப்படுத்துவது போல், சீறிவரும் வெள்ளத்தைக் கால்வாய்,குளங்களிலே சீராகச் செல்லும்படி செலுத்திச் சிறைப்படுத்திய இரும்பைப் போன்ற வலிமை மிக்க கால்களையுடைய மள்ளர் குலத்தார், பின்னர் அந்த நீரை வயல்களிலே பாய்ச்சி உளவுத் தொழிலைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் விளக்குகின்றது.


செய்யுள் 6 
மள்ளர் காலி முளைத்தனர் களிப்பால்
        "ஏர்தரு மூரியேறு மிருங்கடா வினமுங் கட்டிக்
         கூர்நு திக் கொழுக்க ளாழ வுழவர வுழுது கோட்கள்
         சீர்தரு நாளில் வானோர்க் கிறைவனாந் தெய்வம் போற்றிக்
         கார்நிற மள்ளர் சாலி முளைத் தனர்க ளிப்பால்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.200 .)

    ஏரில் பூட்டத்தக்க வலிமையான எருதுகளையும், பெரிய எருமைக் கடாக்களையும், ஏரில் பூட்டி, கூர்மையான நுனி கொண்ட கொழுக்களால் ஆழமாகவும், நெருக்கமாகவும் உழுது, கோள்கள் சரியான நிலையில் இருக்கும் நல்ல நாளில் வானோர்க்கு இறைவனான தேவேந்திரனைப் போற்றித் தொழுவது கருமை நிற வண்ணம் கொண்ட மள்ளர் குலத்தார் மகிழ்ச்சி போங்க நாற்றாங்கால் நாற்று முளைத்து வளர நெல் விதைத்தனர்.

செய்யுள் 8 
மள்ளர் தம் சொற்ப்பொழிவால் சமய வேறுபாடு களைதல்
        "அறநெறி யெய்து செல்வா மாமென வளர்ந்த நாற்றை 
         மரநெறிக் கூற்ற மள்ள வாள்விழிக்   கடைசி மாதர்
         முறநெறி செவிமா லியானை முரண்டரு மள்ளர் சொல்லாற்
         பிற பிற சமைய போதம் பிரித்தாற்போல் பெயர்த்தா ரன்றே"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.201 .)

    அற வழியில் மள்ளர் விதை விதைத்து வளர்த்த நாற்றை படை வீரர்களில் கடும் நெறி கூற்றுவன் போல், வாள் விளிக் கடைசியரான மல்லத்தியர் பிடுங்கினார்கள். முறம் போன்ற காதுகளையுடைய செழிப்பு மிக்க பெரிய யானை போன்ற வலிமை மிக்க மள்ளர் தமது சொற்ப்பொழிவால்  பிற சமய வேறுபாடுகளைக் களைந்து எறிவது  போல்,மள்ளர்க மகளின் நாற்றுகளைப் பறித்தெடுத்தனர்' என்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் உவமை காட்டி விளக்குகின்றது.


செய்யுள் 10
மள்ளத்தியரின் கொலை விழிக்கு அஞ்சி ஓடும் பகைவர்கள்
        "பதித்திடு நாறு வீறி யெழுந்திடும் பருவ நோக்கி
         மதித்திடு மள்ளர் சொல்லான் மள்ளிய ரெல்லாங் கூடிக்
         குதித்திடுஞ் சேர்கள் கூர்வேற் கொலை விழிக் கஞ்சியோட
         வுதித்திடு பகைபோற் றோன்றுங் களைகளைக் களைத லுற்றார்"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.202 .)

    நட்ட நாற்றுகள் செழிப்புடன் உயர்ந்து எழுந்திடும் காலத்தில் உலகத்தார் மதித்திடும், மள்ளர் சொல்லத் துள்ளிக் குதித்திடும் மீன்கள் போலக் கண்கள் கொண்ட மள்ளத்தியரெல்லாம் கூடிக் கூறிய வேலின் கொலைத் தன்மையுள்ள, பார்வைக்கு அஞ்சியோடும் பகைவரிடம் தோன்றும் பகைபோல, வயல்களில் வளர்ந்த கலைகளைப் பிடுங்கி எறிந்தனர்.

செய்யுள் 13 
மள்ளர் நெல்லளத்தல்
        "காரெலாஞ் சேர்த்துக் கட்டுந் தகுதியோர் கடாக்கள் கட்டிப்
         போரலாம் பிரித்துத் தள்ளி யடித்ததிற் பதடி போக்கிச்
         சீரெலாஞ் சிறந்த மள்ளர் தூற்றிநெற் கூட்டிச் சேர்த்துப்
         பாரெல்லாம் புகழ்க ணேசர்ப் பணிந்து பின் னளந்தா ரன்றே"

(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.203 .)

    கருமை வண்ண மேகத்தைஎல்லாம் கூட்டிச் சேர்த்துக் கட்டினார் போல் கரிய வண்ண எருமைக் கடாக்களைத் தாம் பில் கட்டி வைக்கோல் போரைப் பிரித்து நிலத்தில் கிடத்திப் போரடித்துத் தூற்றிப் பதர்களைப் போக்கி நெல்லைக் கூட்டிச் சேகரிக்கும், பெருமைகளில் சிறந்த மள்ளர் குலத்தார் உலகம் புகழும் கணேசரைத் தொழுது பின் நெல்லை அளந்தார்கள் என்கிறது மேற்கொண்ட செய்யுள்.

சீவலமாற பாண்டியனின் சங்கர நாராயண சுவாமி கோயில் புராணம் மள்ளர் வரலாற்றை மாண்புடன் எடுத்துரைக்கின்றது. கல்வெட்டுச் செய்திகளும், கள ஆய்வு செய்திகளும், புராண செய்யுள்களும் பாண்டிய மரபினர் பள்ளர்களே என்று பரிந்துரை செய்கின்றது. பாண்டியராட்சி முடிவுற்ற போது அவர் தம் மரபினரான பள்ளர்களுக்கு இருந்த பேரளவிலான உரிமை மறுக்கப் பட்டுப் பெயரளவிலான உருமை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.


19 comments:

  1. சங்கரலிங்கப்பெருமான் உடனுறை கோமதி அம்பாள் ஆகிய இரு சந்திகள்தான் முதலில் இருந்தன. 12-ஆம் நூற்றாண்டில் சங்கரநாராயணர் சந்நிதி நடுவில் நுழைக்கப்பட்டது என்று அப்போதைய ஐசிஎஸ் எச் ஆர் பெட் என்பவர் எழுதிய தகவல் tinnavelly gazetteer Vol I page 413-414-காணப்படுகிறது. இந்த உண்மை சங்கரன்கோவில், கோவிலில் ரூ5/-க்கு விற்கப்படும் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தலவரலாறு-பக்கம் 20-இல் காணப்படுகிறது. ஊரின் தென் பகுதியில் காவல்பறையனுக்கு மேற்கூறை இடப்படதா ஒரே ஒரு சிறு சந்நிதிக் கோவிலும் உண்டு. கோவில் கட்டிய மன்னனுக்குத் துணைநின்ற- கோவில் கட்டக் காரணமாக இருந்த காவல்பறையனுக்கு கோவிலுக்குள் சிலை எதுவும் இல்லை என்பது வருத்தத்துக்கு உரிய செய்தியாகும். தற்போது கோவில் சொத்துக்கள் சங்கரநாராயணர் பேருக்கே உள்ளன; வாங்க்கப்படுகின்றன. அவருக்குப் "பட்டாதார்" என்ற சிறப்புப் பெயரும் உண்டு. ஆனால், பூஜை முறைகள் கோமதி அம்பாள்-சங்கரலிங்கப் பெருமானுக்கு முன்பிருந்ததுபோலவே கடைப்பிடிக்கப்படுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. என்னென்ன சொல்றான் பாருங்க 🤣🤣🤣 கம்பிகட்டுற கதையா உடுன்றான் பாருங்க 🤣🤣🤣 இன்றளவும் அந்த திருவாரூர் கோவிலுக்கு முதல் மரியாதை பறையருக்கு மட்டும் தான் உங்க கம்பிகட்டுற கதையை ஆதரத்தோட போடலாம்ல அப்போதான் சிரிப்பதற்கு இன்னும் வசதியாக இருக்கும் 🤣🤣🤣

      Delete
  2. சங்கரன்கோவிலுக்குள் நுழையும்போது இரு பெரும் மரக்கதவுகளைக் கடந்து செல்லவேண்டும். அப்படியே இடப்புறமாகச் சென்றால் கோவில் அலுவலகத்தைப் பார்த்திட இயலும். அந்த அலுவலக நுழைவாயிலின் இடப்புறமாக காவல்பறையனாருக்குச் சிலை ஒன்று தூணில் இருப்பதை, 03-09-2013-தேதி காலை 11.30 மணியளவில் கண்டு மகிழ்ந்தோம். மேலும் ஏழு / எட்டு சிலைகள் சிறிதும் பெரிதுமாக தூண்களில் பல இடங்களில் உள்ளதாகப் பெரியவர் ஒருவர் கூறினார்.சித்திரைத் தேர்த்திருவிழா இங்கு முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது. தடிபோட்டுத் தேரைப் பாதுகாப்பாக வீதிகளில் பவனிவரத் துணைபுரியும் பள்ளர்களுக்கு, தேரோட்டம் முடிந்தபின், திருக்கோவிலிலிருந்து சிறப்பு மரியாதையும் செய்யப்பட்டுவருகின்றது.

    ReplyDelete
  3. பாண்டியன் தெய்வேந்திரனிடம் சென்று கேட்க்க அதை மறுத்ததால் அங்கிருந்தவர்களை வழுக்கட்டாயமாக அழைத்து வந்தான் என்பதுதான் புராணம்.

    பாண்டியன் வம்படியாக அழைத்து வந்தவன் தான் பள்ளன் எனும்போது. அந்த பள்ளன் எப்படி பாண்டிய மரபிணன்???

    ReplyDelete
    Replies
    1. அருமையான கேள்வி பதில் கேட்டால் சேர சோழ பாண்டியர் இவர்கள் இல்லை என்பதற்கு இந்த கல்வெட்டு தான் சாட்சி மறுக்க முடியாது அனால் இதை தேவேந்திரர்களிடம் கேட்டால் இதை மறுப்பார் முறைப்பார் தகாத முறையில் பேசுவார்கள் இருந்தாலும் உண்மை ஒரு நாளும் உறங்காது சேர சோழ பாண்டியர்களால் இழுத்து வரப்பட்டு உழவு தொழில் செய்ய பயன்படுத்தி கொண்டார் இவர்கள் எப்படி மன்னராக இருக்க முடியும்

      Delete
    2. ம்ம்ம் உண்மை
      அடிமையாய் இழுத்து வந்தான்...என்று தான் இருக்கிறது

      Delete
    3. அடிமை என்பதை மறைத்து
      பரிவட்டம் என்று தம்பட்டம் அடித்து திரிவான்...
      உழு சூடு வாங்கியவன் பள்ளன்...
      1 பணத்துக்கு ஏலம் போட்டு விற்கப் பட்டவன் பள்ளன்..
      பெண்ணை திருமணம் செய்து கொடுத்து
      கணவன் வீட்டுக்கு செல்லும் போது 20 குடி பள்ளரையும் கொடுத்து அனுப்புவது பெருமை...
      இன்னும் செல்வந்தர்கள் 50 மொத்த குடும்பம் பள்ளரை அனுப்பி வைப்பார்கள்...

      Delete
  4. பாண்டியர் ஆட்சி 12 ஆம் நூற்றாண்டிற்க்கு முன்னரே முடிவுற்றதா??? 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று பள்ள என்று குறிப்பிடுகின்றதே ஏன்? தேவேந்திரனிடமிருந்து அழைத்துவரப்பட்ட பள்ளன் எப்படி பாண்டிய மரபினர்???

    ReplyDelete
  5. கடைசி சந்தேகம் மள்ளர் மள்ளர் மள்ளர் என்றுதான் சொல்லி இருக்கீங்க... அந்த மள்ளர் தான் பள்ளர் என்பதற்க்கு ஆதாரம் என்ன??? 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஏன் பள்ள என்று குறிப்பிட வேண்டும்???

    நாயக்கர் வருகைக்கு பின்பு தான் வீழ்த்தப்பட்டனர் எனில் 12ஆம் நூற்றாண்டில் உள்ள கல்வெட்டு ஏன்என்று சொல்ல வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆதங்கப்படும் நீ மறுப்பதற்கு ஆதாரம் தேடி கொண்டுவந்து பதிவு செய், படிப்பு ஆய்வு என்றால் ஆதாரத்தை தேடுவது ........உங்களுக்கு வரலாறு சில நூறு ஆண்டுகளே தமிழ்நாட்டில். வாழ்க வள்ளல் தன்மை கொண்ட பள்ளர் வம்சம்.

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. இதில் அரசன் புதிதாக மகிழ்ந்து வரிசை வழங்கினான்.ஆனால் பறையர்கள் தாங்கள் இந்த வரிசை தங்களுக்கு உரியது என்று பூர்வ ராஜ பட்டையத்தை காட்டினர்.ஆதை ஆராய்ந்து அவர்களுக்கும் வழங்குவதாக கூறுகிறது.அப்படியானால் பறையர் பூர்வராஜ பட்டையம் இருந்து அனுபவித்த உரிமை பறிக்க பட்டது.அப்படியானால் இதற்கு உரிமையாளர் யார் நீங்களே கூறவும்

    ReplyDelete
  8. அறிவு ஜீவிகளே மள்ளர்கள் தான் பள்ளர்கள் ஆதாரம் பள்ளு இலக்கியத்தில் உண்டு..போய் படியுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வெறும் 500 வருட பாரம்பரியம் பள்ளர்களுக்கு

      Delete
  9. 1. மேற்கண்ட கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள பாண்டியன்
    தேவேந்திரனோடே கூடியிருக்க என்ற செய்தியும் தேவேந்திரக்
    குடும்பன் உக்கிரப் பெரு வழுதியோடும், சோழனோடும், சேரனோடும்
    உறவுப் படுத்துகின்ற செய்தியும் தேவேந்திரர்களுக்குப் பஞ்சவன்
    விருது வழங்கப்பட்ட செய்தும் பள்ளர்களே பாண்டிய மரபினர்
    என்பதை உறுதி செய்கின்றன.

    பஞ்சவன் PANJAVAN
    { pronoun masculine }
    பறையர் குல ஆண்களை குறிக்கும் சொல் பஞ்சவன். இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரமத்தின் படி நான்கு வர்ணத்திற்கு அப்பாற்பட்ட பறையர் குல மக்கள் பஞ்சவர்கள் என அழைக்கபடுகிறார்கள்.
    PANJAVAN MEANS PARAYAN
    • Tamil lexicon
    The Pāṇḍya
    தடிபோடுவது (முட்டு மரம் ) பள்ளர்களின் வேலை அனைத்து ஊர்களிலும் தேரோட்டத்தின் போது
    மூவேந்தர்களும் இந்திரனிடம் மழை கேட்டு போன விடத்து இந்திரன் இட்ட
    ஆசனங்களில் தான் காட்டிய குறிப்பின் படி சேரனும் சோழனும் அடக்கமாக
    அமர்ந்தனர். பாண்டியன் மட்டும் இந்திரனுக்குச் சரிநிகர் சமானமாக அவன்
    வீற்றிருந்த சிங்காதனத்திலேயே பக்கத்தில் உட்கார்ந்தான். பாண்டியனைத்தவி
    மற்ற இருவருக்கும் மழை தருவாதாக வரம் கொடுத்தான் பாண்டியன் உடனே
    கோபமாக வெளியேறினான்.பிறகு. மேகங்கள் அங்கு நிறை குடம் இட்டு
    இடுப்பில் வைத்து நடக்கும் பெண்களைப் போல அவன் நாட்டு மலை முகடுகளில்
    மேய்ந்து கொண்டிருந்தவற்றை விலங்கிட்டு இழுத்துப் பிடித்துச் சிறை செய்தான்
    இது தான் புரானக் கதை
    நிஜ செய்தி இது தான்:

    பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம்(41000) வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்கிறது. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டில் குடியேற்றினர் என்றும், இதில் தேவேந்திர பள்ளன் மற்றும் தேவேந்திரப் பறையன் முதலிய தேவேந்திரன் மகன்கள் உண்டு.இன்னும் இரண்டு மகனார்கள் யார் என தெரியவில்லை.

    பாண்டியன் உக்கிரப்பெருவழுதி நாலு(4) மகன்கள் அல்ல நாற்பத்தொன்னாயிரம் இந்திரன் மகன்களை தொண்டை நாட்டில் மட்டுமல்ல அவன் சிறை எடுத்த நாடு எது தெரியுமா? எல்லா
    வேளாளர்களுக்கும் பூர்வீகமான கங்க நாடு என்றழைக்கப்படும் கர்நாடக நாடு.
    கங்க மன்னன் தன்னை இந்திரனாக கூறிக்கொள்வான்.இவனது முத்திரை தேவேந்திரனின் வாகனமான யானையாகும்.
    இவனது முன்னோர்கள் கங்கை கரையில் வேளாண்மையில் ஈடுபட்டவர்கள்.
    கங்கநாட்டின் மன்னர்களின் சிலர்,
    Western Ganga Kings (350-999) Konganivarman Madhava (350 - 370) Madhava (370-390) Harivarman (390-410) Vishnugopa (410-430) Madhava III Tandangala (430-469) Avinita (469 - 529) Durvinita (529 - 579) Mushkara (579 - 604) Polavira (604 - 629) Srivikrama (629 - 654) Bhuvikarma (654 - 679) Shivamara I (679 - 726) Sripurusha (726 - 788) Shivamara II (788 - 816) Rachamalla I (816 - 843) Ereganga Neetimarga (843 - 870) Rachamalla II (870 - 907) Ereganga Neetimarga II (907 - 921) Narasimha (921 - 933) Rachamalla III (933 - 938) Butuga II (938 - 961) Marulaganga Neetimarga (961 - 963) Marasimha II Satyavakya (963 - 975) Rachamalla IV Satyavakya (975 - 986) Rachamalla V (Rakkasaganga) (986 - 999) Neetimarga Permanadi (999) Indravarman (?-893) Devendravarman IV (893-?) Vajrahasta Anantavarman (1038-?)

    அண்ட புழுகு ஆயிரம்

    ReplyDelete
    Replies
    1. தேவேந்திரன் என்பவன் மள்ளர் இனத்தவரில் சோழனையே குறிக்கும்.

      சோழன் என்பது இடத்தின்பெயர் சோறுடைய தேசம் அதாவது நெல் விழையும் பூமி.

      பஞ்சவன் என்பது வேறு பஞ்சமர் என்பது வேறு.

      பஞ்சவன் விருது மள்ளர் இனத்தவர்களுக்கு உரியது.

      பாண்டியன் என்பது இனத்தின் பெயர் பள்ளர்களின் கடவுள் (பள்ளர் குல தலைவன்) என்பது பொருள்.

      சேரன் இடவாகு பெயர்.

      சேர நாடு பெயர் காரணம் சரியாக தெரியவில்லை மலை சரிவுகளை கொண்ட நிலப்பரப்பு என்பதால் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம்.

      பல்லவர் இனத்தை சுட்டும் பெயர்.

      பாண்டியன் மூத்த அரச குடி அதில் இருந்து வலிமை கொண்டு தனி அரசாக உருவானதே தேவேந்திரன் அரசு.

      எவ்வளவு செல்வ மற்றும் வலிமையுடன் இருந்தாலும் முதலில் தோன்றிய பாண்டியர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இருந்தான் தேவேந்திரன்.

      தேவேந்திரர் இராவணனில் இருந்து தனி அரச குடியாக இருக்கலாம்.

      பொதுவாக மள்ளர் இனத்தவர் குடும்பர்களே.

      குடும்பர்கள் இந்தியா முழுவதும் அரச குடியாக உள்ளனர்.

      புத்தர் கூட தேவேந்திரன் வழிவந்தவர்களே.

      வரலாற்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியம்.

      Delete
    2. தேவேந்திரர் என்பது பள்ளர்களை மட்டுமே குறிக்கும்.

      மற்ற எந்த சமூகத்தையும் குறிக்காது சான்றுகளும் கிடையாது.

      சிலபேர் பிற்காலத்தில் தேவேந்திரன் என்று போலியா கூறி கொண்டனர் உதாரணமாக முக்குலத்தோர்.

      அது மட்டும் இல்லை தேவேந்திரர் மற்றும் பறையர் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள்.

      தேவேந்திரர் தமிழ் பூர்வீக தலைகுடியினர்.

      பறையர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து பிற்காலத்தில் குடியேறிய நாடோடி இனத்தினர்.

      எனவே போய் வரலாற்றை முழுவதும் படி தேவை இல்லாமல் உளரிதிரியாதே.

      Delete
    3. நீங்கள் சொல்வது உண்மை

      Delete
    4. தெளிவான விளக்கம் en nar

      Delete